மறுபிறப்புக் கோட்பாடுகள்
எது ஒன்று மரணத்திற்குப் பின்பும் வாழ்கிறதோ அதனை ஆன்மா என்றும், உயர் சுயம் என்றும், நான் என்றும், தெய்வீகத் துளி என்றும் அழைக்கப்படுகிறது. அது போன்றதொரு நம்பிக்கைகள் அந்த ஆன்மா புதியதொரு உடலை தனக்காகத் தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த வாழ்க்கையை வாழ்கிறது என்பதில் உறுதியாக இருக்கிறது.
இந்திய மரபில் மறுபிறப்பு என்பது நீண்ட நெடுங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. அது சைவம், வைணவம், புத்த மதம், ஜைன மதம் போன்ற அனைத்து மதங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு பொதுவான கோட்பாடாக இருக்கிறது. இதில் நம்பிக்கையற்றோர் இன்றும் இந்தக் கருத்தை குறைகூறிக் கொண்டே இருந்தாலும் கூட மறுபிறப்பு பற்றிய ஆராய்ச்சி இன்னும் அதிகமாக தேவை என்பதையும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கடந்த காலத்திற்கு பயணம் என்ற இந்த முறையின் நோக்கம் என்ன?
- நீங்கள் யாராக இருந்தீர்கள், அந்த வாழ்க்கை தற்போதைய வாழ்க்கையை எவ்விதத்தில் பாதிக்கிறது?
- கர்மா – உங்களது கர்மாவை குணப்படுத்திக் கொள்வது – சீர்படுத்திக் கொள்வது.
- கடந்தகால கர்மாவை கழிப்பது, அதன் மூலம் உங்களது விதியையும் மாற்றிக் கொள்வது.
- தீர்க்கப்படாத கடமைகளை தீர்த்துக் கொள்ளுதல்.
- கடந்தகாலச் செயல்பாடுகளின் கடனை தீர்த்தல் மற்றும் மன்னித்தல்.
- உங்களுக்குள் மறைந்திருக்கும் திறன்களையும் தனித்துவத்தையும் கண்டறிந்து மேம்படுத்திக் கொள்ளுதல்.
- ஆழ்ந்த குணமாக்கல்.
- Soulmate என்கிற இணை ஆன்மாக்களை கண்டறிதல், தொடர்புகளை அறிந்து கொள்ளுதல்.
- Dejavu வை வெளிக்கொணர்தல்.
- ஆழ்மனத் தடைகளையும், எதிர்மறை பழக்கங்களையும் நீக்கிக் கொள்ளுதல்.
- கடுமையான பயங்கள், திரும்பத்திரும்ப ஏற்படும் வலி வேதனைகள் போன்றவை சீராக.
- தற்போதைய உறவுகளின் கடந்தகால பிணைப்பினை ஆராய்தல்.
- ஒருவித ஆர்வம் மற்றும் உற்சாகத்துக்காக வேண்டி… வேறு என்ன இருக்கிறது?!
பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபியின் பலன்கள்
- அது உங்கள் உடல் மற்றும் உணர்வுபூர்வமான சிக்கல்களைத் தீர்க்கிறது.
- அது உங்கள் பயத்தையும், கடுமையான பாதிப்புகளால் ஏற்பட்ட சிக்கல்களையும் புரிந்து கொள்வதை ஏதுவாக்குகிறது.
- இதன் மூலம் பிறருடனான நமது உறவு முறை மற்றும் அவர்களது வாழ்க்கையில் நமது பங்கு மற்றும் நமது வாழ்க்கையில் அவர்களது பங்கு போன்றவற்றை அறிந்து கொள்ளுதல்.
- நமது உறவு முறைகளினூடே போகின்ற இழைகளை, இணைப்புகளைக் கண்டறிதல், அந்த உறவு முறைகளின் பிணைப்பின் நோக்கத்தை புரிந்து கொள்ளுதல்.
- நமது வாழ்க்கையை மேலும் அன்புடனும் கருணையுடனும் பிறரை மன்னிக்கும் மனோபாவத்துடன் வாழ்வதற்கு உதவுகிறது.