PLRT பற்றிய மேலும் சில விளக்கங்கள்
கேள்வி; கடந்தகால வாழ்க்கையினை நினைவு கூற இயலாத துயரர்கள் பற்றி கூறுங்களேன்..
பதில்; ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.. தங்களால் எதையும் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை என்பதுபோல கூறத்தான் செய்கிறார்கள். அதுபோன்ற தருணங்களில் உங்கள் கண்களுக்கு என்ன ஆயிற்று? உங்கள் காதுகளுக்கு என்ன ஆயிற்று? ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை? என்பது போன்ற கேள்விகளை நான் கேட்பது உண்டு.
அந்த உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தும் போது, அதுவே அந்த தடைகளை உடைக்க கூடியதாகவும் இருக்கிறது. ஒரு சிலர் தங்கள் கண் கட்டப்பட்டு இருப்பதை போன்று உணர்வதாகவும், காதுகள் அடைத்து இருப்பது போன்ற உணர்வதாகவும் கூட கூறுவார்கள். அதற்கேற்ற வகையில் நாம் கருத்துத் தூண்டல்கள் அளிக்கும்போது அந்த நிலையில் இருந்து அவர்கள் வெளிவந்து விடுவதும் உண்டு.
ஒரு சில மதங்களின் கட்டுப்பாடுகள், திணிக்கப்பட்ட கருத்துக்கள், பதிவுகள் போன்ற விஷயங்கள் கூட கடந்த கால நினைவுகளை மீட்டுக் கொண்டு வருவதற்கு தடைக்கற்களாக இருப்பதையும் நம்மால் காண முடிகிறது. சிலருக்கு பய உணர்வு கூட கடந்த கால வாழ்க்கை நினைவுகளைப் பார்ப்பதில் தடைகளை ஏற்படுத்தலாம்.
சில மதங்கள் ஹிப்னாஸிஸ் போன்ற விஷயங்களை தங்களது கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதாக கூறுவது, அது அவர்களது ஆன்மாவிற்கும் அதன் மீட்சிக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்று திரும்பத் திரும்ப விதைக்கப்படும் கருத்துகளும் கடந்தகால வாழ்க்கை நினைவுகளை மீட்டெடுக்கும் இந்த செயல்முறைக்கு பெரும் பாதகமாக இருப்பதை உணர முடிகிறது.
அதைப்போலவே இந்தச் செயல்முறைக்கு முழுமனதாக விரும்பாதவர்களை, கடந்தகால நினைவுகளை மீட்டெடுத்த செய்வது சிரமம் ஏற்படுவதையும் நாம் உணர முடிகிறது.
கேள்வி; ஒருவரது உணர்வு நிலையில் இந்த சிகிச்சை முறை எந்த விதத்தில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது?
பதில்; இது தனிப்பட்ட ஒருவரை பொறுத்தது பொதுப்படையாக எதையும் நாம் கூற இயலாது. சிலர் குழந்தைப் பருவ நிகழ்வுகள் நினைவுக்கு வரும்போது தனது கற்பனையாகவோ, கனவைப் போலவோ கூட கருதுகின்றனர். என்றாலும் வலி, வேதனை நிறைந்த விஷயங்களை அவர்கள் அதே வலியுடன் அனுபவிக்கும் போதுதான் இதன் உண்மைத்தன்மையை உணர்கிறார்கள்… இதை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள்…
ஆரம்பத்தில் சிலரது கடந்த கால வாழ்க்கை நினைவுகளை மீட்டுக் கொண்டு வருவது சிரமமாக இருக்கலாம் என்றாலும் அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி அளிப்பதாகவே நான் காண்கிறேன். ஒருவர் தனது உணர்வினையும் அனுபவத்தினையும் முதலில் நம்ப வேண்டும் அவ்வளவுதான்.
கேள்வி; தற்போதைய வாழ்வின் அதிர்ச்சிகரமான விஷயங்களை நீங்கள் உங்கள் பணிக்காக தேர்ந்தெடுக்கிறீர்கள்?
பதில்; அதிர்ச்சிகரமான அல்லது தீவிரமான பாதிப்புகளை இந்த வாழ்க்கையின் நிகழ்வுகளும் பிறப்பிற்கு முன்பு அவர்கள் சந்தித்த விஷயங்களும் கூட ஏற்படுத்துவது உண்டு.
நமது நினைவகத்தை பொருத்தவரை பாதிப்பு என்பது மிகச் சமீபத்தில் ஏற்பட்டதா அல்லது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டதா என்பது ஒரு பொருட்டே அல்ல. இங்கே பாதிப்பு அதன் விளைவு என்ற தத்துவம் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. ( cause and effect ) செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. ஆதலால் தற்போதைய வாழ்வில் அவருக்கு ஏதேனும் தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் கருவுற்றிருக்கும் போது அவரது அனுபவங்கள் ஆகியவையும் கூட அவரது தற்போதைய பிரச்சனையின் காரணமாக அமையலாம். தற்போதைய வாழ்க்கையில் அவருக்கு தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில் கூட சிலரால் கடந்தகால வாழ்க்கை சம்பவங்களுக்கு உடனடியாக செல்ல முடியாது போகலாம். ஆகவே தற்போதைய வாழ்க்கையின் துயரங்களை பாதிப்புகளை களைவதற்கான வழிகாட்டுதல்களை அளித்த பின்னரே அவரை நாம் கடந்த கால வாழ்க்கை நினைவுகளுக்கு இட்டுச் செல்ல முடியும்..
கேள்வி; கருவுற்றிருக்கும் காலத்திற்கு நாம் பின்னோக்கி அவரை அழைத்துச் செல்லும்போது அவர்களது பெற்றோர்களின் ரகசியங்கள் கூட அவர்களுக்கு தெரிந்து விடும் அல்லவா? அப்படி தெரிந்து விடும் பட்சத்தில் பெற்றோருடனான அவர்களது உறவு இனியும் சுமுகமாக தொடருமா?
பதில்; பொதுவாகவே ஒருவருக்கு நினைவு மனதில் அந்த நினைவுகள் இல்லையென்றாலும் கூட அடி ஆழ்மனதில் அனைத்துமே ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும். நமது நினைவகத்தில் புதைக்கப்பட்ட அந்த நினைவுகள் கிளறி விடப்பட்டு மேலே கொண்டு வரப்படும் பட்சத்தில் அவை அவர்களுக்குள் தோற்றுவித்து இருக்கும் அந்த இறுக்கமான உணர்வினை விடுவித்து தற்போதைய வாழ்க்கை அனுபவத்தின் மூலமாக அந்த உணர்வுகளை பார்க்கும்போது அந்த நினைவுகள் அவர்களுக்கு தேவையற்றதாக பெரும்பாலும் தோன்றும்.
ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் மனக்கசப்புகள் பாதிப்புகள் போன்றவையே இன்னதென்று அறியாத ஒரு வெறுப்பையும் கோபத்தையும் பெற்றோர் மீது அவர்கள் செலுத்த காரணமாக இருக்கலாம். அத்தகைய நினைவுகள் கிளறி விடப்படும் போது அந்த உணர்வுகள் களையப்பட்டு பெற்றோர் மீதான அந்த மனக்கசப்புகள் மறைவதையும் நாம் அன்றாடம் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த உண்மையை துயரர்கள் உணரும்போது, பெற்றோர் மீதான தனது தேவையற்ற மனோபாவத்தை எளிதில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
குழந்தைகள் கருவுற்றிருக்கும் காலத்தில் பெற்றோரிடையே நடைபெறும் கருத்து மோதல்கள், கோப உணர்வுகள் எப்போதுமே குழந்தையை நோக்கி திருப்பப் படுவதாக நாம் காணமுடிகிறது. இதுபோன்ற விஷயங்களை ஒருவர் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் போது தாய் அல்லது தந்தையின் பார்வையிலிருந்து அந்த விஷயத்தை முதன்முதலாக பார்க்க ஆரம்பிக்கிறார். பொதுவாகவே தனது பெற்றோருடனான அவர்களது உறவு முறை அதற்குப் பின்னர் மேம்பாடு அடையவே செய்கிறது. தமது பெற்றோர்களை முதன்முதலாக அவர்கள் பரிவுடன் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.
கேள்வி; உங்களது அனுபவத்தில் எத்தனை பேர் மாற்றுப்பாலினராக பிறப்பு எடுத்திருக்கிறார்கள்?
பதில்; அதற்கு ஒரு புள்ளி விபரமும் என்னிடம் இல்லை. பெரும்பாலும் அனைவருக்குமே மாற்றுப் பாலினராக இருந்த அனுபவம் இருப்பதை என்னால் உணர முடிகிறது. Helen Wambach என்கிற மருத்துவர் கிட்டத்தட்ட 80% பேர் இருபாலினராகவும் பிறக்கிறார்கள் என்று கூறுகிறார்.
கேள்வி; தற்போது என் வாழ்வில் சம்பந்தப்பட்டிருக்கின்ற மனிதர்களை கடந்தகால வாழ்க்கையிலும் என்னால் காண இயலுமா?
பதில்; பெரும்பாலும் அது சாத்தியமே. உங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்ற மனிதர்களை மட்டுமல்ல உங்களது வீட்டு விலங்குகளைக் கூட, செல்லப்பிராணிகளைக் கூட உங்களால் அடையாளம் காண முடியும். அந்த அனுபவங்களே நம்மோடு தொடர்பு கொண்டு இருக்கின்ற ஒவ்வொருவரும் பல பிறவிகளாக அந்த தொடர்பிலேயே இருந்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாகவும், அதன்மூலம் நாம் எப்போதுமே இருந்து விடப் போவதில்லை என்ற ஆணித்தரமான ஒரு நம்பிக்கையையும் நம்முள் ஏற்படுத்துவதாக இருக்கிறது. அப்போது ஒவ்வொரு நபரும் மரணம், பிரிவு போன்ற பயங்களிலிருந்து எளிதில் விடுபடுவதை நாம் காண முடிகிறது..
கேள்வி; எதிர்காலத்தை நாம் பார்க்க முடியும் என்பது கர்ம விதிக்கு எதிரானது அல்லவா?
பதில்; ஆம், என்றாலும் சிகிச்சை முறைக்கு சில விஷயங்கள், அனுபவங்கள் தேவை என்பதை வைத்து அதுபோன்ற ஒரு வழிகாட்டுதல்களை நாம் அளிக்கிறோம். எப்போதுமே நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மனிதன் தனது சுய விருப்பத்தினாலும், புரிந்து கொள்ளுதலாலும் ஆக்கப்பட்டவன். தற்போது அவன் எந்த வகையில் தனது சிந்தனையையும் வாழ்க்கையும் வடிவமைக்கிறானோ அதையொட்டியே அவனது எதிர்காலம் மாறக்கூடும். எனவே இந்த மாதிரியான எதிர்காலத்திற்கு செல்லும் நிகழ்வுகள் கட்டாயம் நடந்தே தீர வேண்டும் என்பது இல்லை. ஆனால் கால ஓட்டத்தில் அவர்கள் ஒரே சீராக சென்று கொண்டிருப்பார்களானால் மிகச் சமீபமாக நடக்கக் கூடிய விஷயங்கள் அவருக்கு உண்மையாகவே எதிர்ப்படலாம்.
கேள்வி; உங்களது வாழ்க்கை அனுபவங்களுக்கு நீங்களே பொறுப்பாளி ஆகிறீர்கள் என்கிற கருத்திற்கு உங்களது விளக்கம் என்ன?
பதில்; தனது வாழ்க்கைக்கு பொறுப்பேற்பது என்பது குற்ற உணர்வை ஏற்படுத்துவது, பழி போடுவது, அவமானப்படுத்துவது அல்லது தண்டனையோ அல்ல. அது வெறுமனே உங்களது தற்போதைய வாழ்க்கை அனுபவங்களுக்கு காரணத்தை கண்டு பிடிக்க கூடிய நிகழ்வே ஆகும். இதைத் தேர்ந்தெடுப்பது நீங்கள் தானேயன்றி உங்களது பெற்றோர்களோ அல்லது உங்களை படைத்தவரோ அல்ல என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வதே. இதை நீங்கள் உளப்பூர்வமாக உணர்ந்து உங்களது வாழ்க்கை அனுபவங்களுக்கு நீங்களே பொறுப்பு என்பதை உங்களது இந்த கடந்தகால வாழ்க்கை நினைவுகளும் அதன் காரணமாக தற்போது நீங்கள் அனுபவித்து வரும் இந்த எதிர்வினைகளும் உங்களுக்கு உணர்த்தி அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள செய்கிறது. உங்களது பலம் மற்றும் பலவீனங்கள், உங்களது திறன் போன்றவற்றை துல்லியமாக நீங்கள் கண்டறியவும் இந்த செயல்முறை உங்களுக்கு உதவக்கூடும்.
கேள்வி; உங்களிடம் சிகிச்சை பெறுவோர் நீங்களே எதிர்பார்க்காத வகையில், எவ்வகையில் எல்லாம் நல்ல விதமான மாற்றத்தினை அனுபவித்து இருக்கிறார்கள்?
பதில்; பொதுவாகவே பெரும்பாலான துயரர்கள் பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபியின் கழிவு பலன்கள் ( residual benefits) என்று சொல்லப்படும் பலன்களை பெறவே செய்கிறார்கள். பல வாழ்க்கையில் ஒரேமாதிரியான கடும் பாதிப்புகளால் மரணம் ஏற்படும்போது, அந்த பாதிப்புகளின் விளைவுகளை சுமந்து வரும் அந்த ஆன்மா இதுபோன்ற சிகிச்சை முறையில் தனது நினைவுகளை, அதன் தாக்கங்களை விடுவித்துக் கொள்ளும் போது அவர்களது உடலில் ஒரு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கடுமையான ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்த பலர் கடந்த கால வாழ்க்கையில், அவர்களது காலத்தில் ஏற்பட்ட கடுமையான அடிகள், சித்திரவதைகள் போன்றவற்றையே வேர்க்காரணங்களாக கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.
உடல் உறுப்பு மாற்றங்களை ஏற்படுத்தி விட்ட முடக்குவாதம் போன்ற நோய் நிலைகளில் கூட ஒரு அற்புதமான விளைவினை இந்த சிகிச்சை முறை ஏற்படுத்துகிறது. தலையில் முடி வளர்தல், கண்பார்வை முன்னேற்றம் அடைதல், உடல் இளைத்தல், மார்பக வளர்ச்சி அடைந்திருக்கும் ஆண்களின் உறுப்பு மாற்றங்கள் போன்ற பல விஷயங்கள் அவர்களே கூறாவிட்டாலும் கூட நல்ல மாற்றம் கண்டிருப்பதாக கூறுகிறார் டாக்டர் பிரையன் வெய்ஸ்.
கேள்வி; உறவு முறைகளின் மீது இந்த சிகிச்சை முறை எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
பதில்; தங்களைச் சுற்றியுள்ள உலகத்தின் மீதான அவர்களது பார்வை பெரும்பாலும் மாறிவிடுகிறது. தன்னைச் சுற்றி இருப்பவருடனான அவர்களது உறவுமுறை, தங்களுடன் வேலை செய்பவர்களுடன் அவர்களது இணக்கம் போன்றவற்றில் நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படுவதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.
உறவுகளுடன் தமது எதிர்மறையான அணுகுமுறைகளும், மனோபாவங்களும் பெரிய அளவில் மாற்றம் காணுவதை அவர்கள் கண்கூடாக பார்க்கிறார்கள். பிறரைப் பற்றி அவர்கள் கொண்டுள்ள எதிர்மறை உணர்வுகளும் மறைவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. தேவையற்ற பயங்கள், தேவையற்ற தாழ்த்திக் கொள்ளும் மனோபாவம் போன்றவைகளில் இருந்தும் அவர்கள் ஈடுபட்டு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். இவ்வாறு பல வகையில் இவர்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை கவனிக்கும் அவர்களது சுற்றத்தினர் எளிதில் அவர்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த சிகிச்சை முறையில் இவ்வாறு அவர்களுக்குள் ஏற்படும் நாற்றம் மிக உடனடியாகவும் எளிதில் மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் வியக்கத்தக்கதொரு வகையில் நடைபெறுகிறது.